Thursday, 10 July 2014

பரதம்

கலை தனில் சிறப்பு
இவள்
நளினம் சேர்த்து
நானம் கலந்து
அழகில் நிறைந்து
நிற்பதாலோ...
விழிகளில் கலந்த
பரதம்
பாதங்கள் பதமாய்
ஜதி போட
விரல்கள் கலை வடிவம்
சொல்ல - உன்
வதனம் வடிவாய்
வடிக்கிறது
பாவம் தனை

இமைகள் கொட்ட
சுவை சேர்க்கும் புருவங்கள்
இதழ்கள் புன்னகைக்க
கன்னங்கள் சகபாடிகள்
மொத்தத்தில் - உன்
அங்ககங்கள் அதனையும்
நடமிடும் பரதம்

Tuesday, 1 July 2014

நிம்மதி

விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்!
'தெருவிளக்கு'(நிம்மதி)....

Friday, 27 June 2014

காதலுக்கு கண் இல்லை

என் காதல் போர்வையால்
உன்னை நான் போர்த்தேன்
உன் காதல் போர்வையால்
என்னை நீ போர்த்தாய் ....!!!
சுகமாக இருந்தது
சுமையாகவும் இருந்தது
இப்போ காதல் போர்வை
இருக்கிறது காதலை
காணவில்லையே ....?
**********************
நெறி கண் திறந்து
நக்கீரன் சாம்பல்
ஆனாரோ தெரியாது
உன் கண் பார்த்து
என் இதயம் சாம்பலாய்
போய் விட்டது ...!!!
உயிரோடு இருக்கும்
கருகிய இதயம் கொண்ட
நடமாடும் மனிதன்
உலகில் நான் தான் ...!!!
**********************
யார் கண்டது நமக்குள்
பிரிவு வரும் என்று
பிரிய முடியாமல் நான்
தவிக்க ...!!!
பிரிய கூடாது என்று
நீ துடிக்க நம் காதல்
பிரிவுக்கு வந்தது ...!!!
காதலுக்கு கண் இல்லை
ஆனால் பிரிவு இருக்கிறது
பண ஆசையால் ....!!!

பிரிவு

முள்ளில் ரோஜா மலர்வதும்
மனதில் காதல் மலர்வதும் இயற்கை
அதை ஒரு முறை பரித்தால்
மறுமுறை ஒட்டாது.............

கோபம்

தினமலராய் இருந்த நீ
என்னை பார்த்ததும்
ஏன் கதிரவனாய் மாறிவிட்டாய்........?

வெட்கம்

வெட்க‌த்தால் மூடிக்கொண்ட‌
அவள் இமைகளை மெல்லத்திறக்கிறேன்,
பூவை திறக்கும் வண்ணத்துப்பூச்சி போல்
மென்மையாய்... என்னுயிரே...

உன் நினைவுகளோடு

அகன்ற வயல்வெளி,
உயர்ந்து நிற்கும் நாற்று,
தவழ்ந்து செல்லும் இளந்தென்றல்
அதனூடே கை கோர்த்தபடி நம் நடை பயணம்
அன்பின் இலக்கணமாய் நாம்
என மெல்ல மெல்ல பதிந்தது உன் நினைவுகள்...

ஈரேழு ஆண்டுகள் உன்னோடான என் வாழ்க்கை
நொறுங்கிப்போனது திடீரென்று,
ஏனோ தெரியவில்லை,
காலம் செய்த காவியமாய்
நான் மட்டும் உன் நினைவுகளோடு
என் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறேன்...

நாலாறு வயது கடந்தது,
ஒரு நாள்,
இருமனங்கள் சங்கமிக்கும் விழா,
ஏதோ இனம்புரியாத ஒரு நெகிழ்ச்சி
மனம் காணாத ஒரு நெருடல்
தலைத்தூக்கிப் பார்க்கின்றேன்
மழையைக்கண்ட உழவனாய்
நெருங்கி வருகின்றாய் தேவதைபோல்...

உன்னவனின் அன்பின் வெளிப்பாடோடு நீ..
நீ தந்த நிஜங்களோடு நான்..
 இன்னும் சற்று நெருங்கி வருகிறாய்...
புன்னகையோடு நலம் விசாரிக்கின்றாய்
நகர்ந்து கொண்டே...

ஏனோ?

என் பதில் உனக்கு தெரியும் என்பதாலோ,
இல்லை தெரியவேண்டாம் என்பதாலோ,

உறைந்து நிற்கின்றென்
நிஜமாய் உன் நினைவுகளோடு....

காதலோடு நான்

அறியாத பயம், புரியாத படபடப்பு,
அழகான நளினம், புது வெட்கம்
கண்டேன் இவைகளுடன் அவளை
மிகச்சிறந்த ஓவியங்களுள் ஒன்றாய்
கல்லூரியின் சேர்க்கை நாட்களிலே,

வகுப்பறைப்பாடங்களுக்கு இடையே
ஜன்னல் ஓரப்பார்வை,
கடந்து செல்லும் தருணங்களின் குறுஞ்சிரிப்பு,
தேர்வு நாட்களின் ஓரவிழிப்பார்வை

புத்தாடை உடுத்திய தெய்வச்சிலையாய்
கோயிலின் வெளிப்புறத்தின் வாசலில்!
ஐஸ்கிரீம் ஒட்டிய உதடுகளோடு கேண்டீனில்
ஒரு குழந்தையாய்,
சினுங்கும் கொலுசொலியை மிஞ்சுகின்ற
அளவு அரட்டையுடன் தோழிகளோடு!!

இவையெல்லாம்,
கடந்தகாலம் என்பதையும் மறந்து
காணத்துடிக்கின்றது மனது
என்ன செய்வேன்,
என் கல்லூரி நாட்களின்
மனதோடு பதிந்துவிட்ட
இனிய நினைவுகளின் காதலோடு நான்....

வைரமுத்து

எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு
மாறும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமைகொள்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும்வரை பொறுத்திருந்தால்
பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது
பகைவனின் பகையை விட
நண்பனின் பகையே ஆபத்தானது

சூரியனுக்கு முன் எழுந்து கொள்
சூரியனை ஜெயிப்பாய்
நீ என்பது உடலா உயிரா பெயரா
மூன்றும் இல்லை செயல்

நீ போகலாம் என்பவன் எஜமான்
வா போகலாம் என்பவன் தலைவன்
நீ எஜமானா? தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னை துரத்தும்
எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான்.
நண்பா எல்லாம் கொஞ்ச காலம்.

பனித்துளி

இதயம் விரித்து
சிறகடித்து பறக்க
ஆசை தேவைப்படுவதில்லை
ஓர் அன்பு மட்டுமே அவசியப்படுகிறது..

மேக நிழலை
கிழித்து துவங்கும்
முதல் துளியாய்
உயிர் தொட துவங்கிவிடுகிறது
அதற்கான ஓர் எதிர்பார்ப்பு ..

சுவாசம் மட்டும்
தொடும் தூரத்தில்
பார்வை உரையாடலாய்
ஓர் இனிமை கொலைக்கு
இடைவெளி விட்டு நகரும்
சின்ன சிணுங்கல்கள் ,
அன்பு நிரப்பிய
ஓர் இதயத்திற்காக ..

அங்கே
மழை நனைக்க மறுக்கும் என்னை
ஓர் பனித்துளி முழுதாய்
நனைத்துவிட்டு போய்விடும் ..
 

பாரதியார் கவிதை

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங்கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

அன்றொரு மழை நாள் - I

செல்லச் சண்டையின்
சிணுங்கள் கோபங்கள்
சுழித்துப் போன உதட்டில்
விழுந்து போன முதல்
மழைத்துளி
அழிந்து போன
ஆணவக் கூறுகள்
அசைத்துப் போனது
ஆசையின் வேர்களை
"ச்சீய்... போடா .."
என்ற வார்த்தையினூடே
ஈரமாகி போயிருந்தன
சண்டையிட்ட
உதடுகள்!
 

வகுப்பறை

பன்னாட்டு நிறுவனதில்
பணியில் அமர்ந்தபோது
பாங்காக கிடைத்த தனியறை
பயணித்துப் பலஊர்களுக்குச்
செல்லும்போது கிடைக்கும்
பளபளக்கும் ஏஸி அறை
மணமானபின் மயக்கிய
பள்ளி அறை என்று
எத்தனை அறைகளைப்
பார்த்து விட்டாலும்
இன்னும் மனதை விட்டு
நீங்காதிருப்பது
ஒன்றுதான் - அது
வகுப்பறை!